கல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு மட்டு மாவட்ட அரசியல்வாதிகளே பதில் கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
99

625.500.560.350.160.300.053.800.900.160.90கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை குழி தோண்டிப் புதைப்பதற்கு தேசிய கல்வியமைச்சு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றதா? என்ற சநதேகம் தோன்றியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கின் கல்வித்துறை வீழ்ச்சிக்கு  ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையாகவுள்ள நிலையில், எமது ஆசிரியர்களை வௌி மாகாணங்களுக்கு நியமிக்கின்றமையானது, கிழக்கு மாகாணத்துக்கு  தேசிய கல்வியமைச்சு செய்த துரோகமாகவே கருத வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூரில் இன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை  இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 5021  ஆசிரியர் வெற்றிடங்களை  சுட்டிக்காட்டி, 1700 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதியையும் அதற்குரிய நிதியையும் நாம் கொண்டு வந்தோம்.

அத்தோடு மட்டும் நின்று விடாமல் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில்  நாம் எமது  மாகாணத்தைச்சேர்ந்த கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களை  எமது  மாகாணத்தலேயே நியமிக்க வேண்டுமென்பதற்கான அழுத்தங்களை க் கொடுத்து போராட்டங்ளையும் முன்னெடுத்து, அவர்களுக்கு எமது மாகாணத்திலேயே நியமனங்ளைப் பெற்றுக்கொடுத்தோம்.

ஆனால், இம்முறை  எமது ஆசிரியர்கள்  வெளி  மாகாணங்களின் தூரப்பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று  எமது  ஆசிரியர்கள் பலர் கஷ்டப்பட்டு படித்து தொழிலே வேண்டாமெனும் நிலைக்குத் தள்ளப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கின்றனர்.

இவர்களின் கண்ணீருக்கு இன்றைய கிழக்கு மாகாணத்தின் மொத்த அதிகாரங்களையும்  தம் வசம் வைத்திருக்கின்ற  ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய  கடமை  இருக்கின்றது. அதுமாத்திரமன்றி, அன்று எமது மாகாண சபை மீது பல்வேறு  குற்றச்சாட்டுக்களை முன்வைத்த மட்டக்களப்பு  மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று எங்கே?

இன்று  எமது  ஆசிரிய வளங்கள் வெளி  மாகணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டு  எமது ஆசிரியர் பற்றாக்குறையும் தொடர்ந்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது.

அன்று பாராளுமன்றத்தில்  எம்மை விமர்சிப்பதற்கும், நகர சபை பணி புரியும் ஊழியர்கள்  குறித்தும் கேள்வியெழுப்ப நேரம் இருந்த உங்களுக்கு இந்தக்கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லையோ?

உங்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் உங்கள் கொள்ளவை இன்று உணர்ந்து கொண்டிருப்பார்கள். சிறுபான்மைச்  சமூகத்துக்கு பாதகமான மாகாண  சபைத்தேர்தல் திருத்தச்சட்டத்தினால் எமக்கு பாதிப்புள்ளதென தெரிந்து கை தூக்கியவர்கள் தானே  நீங்கள். ஆக. சமூகத்தின் பிரச்சினை தொடர்பிலேயே பேச முடியாத  நீங்கள், எப்படி கல்வியற்கல்லூரி  ஆசிரியர்களின்  பிரச்சினைக்குத் தீர்வைக்கோரி பாராளுமன்றத்தில் பேசப்போகின்றீர்கள்?

வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையுள்ளதென்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள் என ஶ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here