யுத்த காலத்தில் கூட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை-பராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

0
260

image_6483441இன்று இலங்கை நாட்டில் எந்தவித ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களுமின்றி எரிபொருள் தட்டுப்பாடு நிலவி நாடே இஸ்தம்பித நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதானது, இவ்வரசின் ஆட்சிக்குறைபாடேயன்றி வேறில்லையென பராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர்  மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம் என்பதை இவ்வரசு காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல விடயங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதிலொன்று தான் இலங்கையில் நிலவிக்கொண்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக்காலமான யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்தில் கூட எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய சரித்திரமில்லை. அப்படித்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சி அமைந்திருந்தது.

இன்று இலங்கை நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. யாரும் வேலை நிறுத்தம் செய்யவில்லை. இப்படியான எரிபொருள் தட்டுப்பாடு எதனால் ஏற்பட்டதென்ற காரணத்தைக்கூட வெளியில் கூறாமல் இவ்வரசு மறைக்கின்றது. அதற்கான காரணத்தை வெளியில் கூறினால் மக்கள் தங்களது ஆட்சியைப்பார்த்து சிரித்து விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.

சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும், இவ்வரசு அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு நிலவினால் நாடே ஒரு கனம் இஸ்தம்பித்து விடும். தற்போது இலங்கை நாடு அரைவாசி இஸ்தம்பித நிலைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு கனமும் பல கோடி பொருளாதார இழப்புக்கள் ஏற்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் இவ்வரசானது அக்கறையற்ற விதத்தில் செயற்படுவதானது, இலங்கை நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது இவ்வரசின் ஆட்சிக்குறைபாடேயன்றி வேறு ஏதுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here