விருது பெற்ற இளம் ஊடகவியலாளர் பளுலுல்லாஹ் எப்.பர்ஹானுக்கு வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்

0
244

நன்றி-ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் (தகவல்-முகநூல்)
காத்தான்குடியின் இளம் ஊடகவியலாளரும் மறைந்த ஊடகவியலாளர் பளுலுல்லாஹ்வின் புதல்வருமான எப்.பர்ஹான் நேற்று 06.11.2017ம் திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழாவில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இளம் துடிப்புள்ள ஊடகவியலாளராக வலம் வரும் இவர், எமது கல்குடா நேசனின் வளர்ச்சியிலும் தனது முழுப்பங்கையும் வகித்துள்ளமையை இந்த பொன்னான நேரத்தில் நினைவுகூர்வதுடன், விருது பெற்ற அவரை கல்குடா நேசன் இணையம சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.

மென்மேலும் அவரது பணி தொடரவும் பல்வேறு விருதுகளைப் பெற்று உயர்நிலையை அடையவும் பிரார்த்திக்கிறோம்.

கல்குடா நேசன் இணையம் சார்பாக
எம்.ஐ.லெப்பைத்தம்பி  (ஆசிரியர்)23316412_2014380998780447_7636174641801995485_n 23132078_2014380995447114_1891185524607636876_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here