ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் புனரமைப்பு

0
314

பாறுக் ஷிஹான்-
வலிகாமம் வடக்கு இராணுவப்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் தற்போது மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் 62 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவில் மீள புனரமைக்கப்படுகின்றது. இங்கு ஒரு மாடிக்கட்டடத்துடன் 4 வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், முன்பு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்துடன் கூடிய வகுப்பறைக்கட்டடம் உடைக்கப்பட்டு, அலுவலகம், வகுப்பறை என மீளப்புனரமைக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடம் தை மாதம் தொடக்கம் இப்பாடசாலையை இயக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

ஊறணி, மயிலிட்டி துறைமுகம் வரையான மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.schoo_ (1) schoo_ (2) schoo_ (3) schoo_ (4) schoo_ (5)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here