தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முறைப்பாடு செய்யவேண்டும்..

0
237

unnamedதனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முறைப்பாடு செய்யவேண்டும் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை தங்கல்லை அங்குலுகொலபெலஸ்ச சிறைச்சாலை வளாகத்தை பார்வையிட சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிலர் தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அர்ஜுன ரனதுங்க வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் இயலாமையை மறைத்துகொள்ள அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது பாவனைக்கு பொருத்தமில்லாத எரிபொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் திருடர்கள் இருப்பதாக கூறினார்கள், இன்று அவர்களின் அரசாங்கத்தில் திருடர்கள் உள்ளதாக அமைச்சரவை அமைச்சர்களே கூறுகின்றனர்.

அர்ஜுன ரனதுங்க அவர்களை அமைச்சு பதவியில் இருந்து நீக்கவே இந்த சூழ்ச்சி இடம்பெறுவதாக நேற்று விஜேதாச ராஜபக்‌ஷ அவர்கள் கூறியுள்ளார்.அவரது கூற்றில் சிலவேளை உண்மையிருக்கலாம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டதால் அர்ஜுன ரனதுங்க அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அர்ஜுன நீக்கப்பட்டன பிழை என கூறியமைக்காக விஜேதாச ராஜபக்‌ஷ அவரதுஅமைச்சில் இருந்து நீக்கப்பட்டார்.

அமைச்சரவையில் இருந்து வெளியேராத அனைவரும் இவர்களது உழல்களுக்கு துனைபோவதாகவே எமக்கு என்னத் தோன்றுகிறது.

தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முறைப்பாடு செய்யவேண்டும்.அல்லது அவர் கூறிய விடயங்களை வைத்து பொலிஸார் இதனை விசாரணை செய்யவேண்டும் என நான்கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தலை நடத்துவதாக கூறுனார்கள் ஆனால் இதுவரை வர்த்தமானியை அச்சுக்கு அனுப்பவில்லை.

அமைச்சர் பைசர் முஸ்தபா வர்த்தமானி அறிவியலுக்கு கையொப்பமிட்டு 24 கையில் வைத்துக்கொண்டிருந்தார். நான் தற்போது இங்கு பேசிக்கொண்டிருக்கு இந்த நிமிடம் வரை வர்த்தமானி அச்சுக்கு போகவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி சுதந்திர கட்சி என எந்த பாகுபாடும் இன்றி இந்த அரசாங்கத்தில் உள்ள மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பொய்யையே செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here