ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பம்.

Spread the love

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

23231397_1695618963813426_4588630640773316920_nஓட்டமாவடி – நாவலடியில் மிகவும் சிறப்பாக இயங்கிவரும் மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் முன்னேற்றப்பாதையின் அடுத்த நகர்வாக கல்லூரியில் அல்குர்ஆன் மனனப்பிரிவு இன்று (8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது அல்குர்ஆனை தங்களது உள்ளத்தில் சுமந்து அதனூடாக பல நன்மைகளை தங்களின் வாழ்வில் எடுத்து நடக்கக்கூடிய ஹாபீழ்களை உருவாக்கும் நோக்கில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது (அல்ஹம்துலில்லாஹ்) என கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இனிவரும் காலங்களில் கல்லூரியில் இணையும் அனைத்து மாணவர்களும் ஹாபீழ்களாக உருவாகிய பின் தொடராக ஷரீஆ கற்கையை தொடரும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொ டுக்கப்படவுள்ளது. எதிர்வரும் வருடம் (2018) ல் குறித்த கலாபீடத்தில் ஹிப்ழ் பிரிவில்  சேர்ந்துகொள்ள விரும்புகின்ற மாணவர்கள் 2017ல் தரம் ஐந்தில் சித்தியடைந்து 2018 ல் தரம் ஆறில் கல்வி கற்கக்கூடியவராக இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

கடந்த வருடம் இக்கலாபீடத்தில் உயர்தரப்பரீட்சை எழுதிய ஒன்பது மாணவர்களும் ஒரே தடவையில் பல்கலைக்கழகத்திக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*