நல்லாட்சியையே விமர்சிக்கும் நல்லாட்சி அமைச்சர் மனோ-பியல் நிஷாந்த

0
275

image_123986672எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் மூக்கை உடைக்க பாய்ந்த மனோ கணேசன் தனது மூக்கை தானே உடைத்துக்கொண்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடானது அதிக சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி இவ்வரசையும் இந்திய நிறுவனமான ஓ.ஐ.சி நிறுவனத்தையும் குறை கூறி வருகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன் எரிபொருள் தட்டுப்பாடு நிலவ கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று இந்தியா காரணமல்ல. எரிபொருளைச் சேமித்து வைக்காமையே காரணமாகுமெனக் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினராவது இந்தியாவைக் குறை கூறுகின்றனர். ஆனால், மனோ கணேசனோ இவ்வாட்சியையே குறை கூறுகிறார். அவர் கூறும் விதத்தில் நோக்கினாலும் பிழை இவ்வரசின் பக்கமே! இதனை அவர் தனது வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு அரசின் ஆட்சிப்பிழையை ஆட்சியின் முக்கியஸ்தர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இவ்வரசின் போக்கு அமைந்துள்ளது. மனோ கணேசனின் குறித்த கருத்து மூலம் அவராகவே தனது மூக்கை உடைத்துக் கொண்டுள்ளார்.

இதில் இன்னுமொரு முக்கிய விடயமுள்ளது. இவ்விடயத்தில் மனோ கணேசன் இவ்வரசு விமர்சனத்துக்குள்ளாவதை விட இந்தியா விமர்சனத்துக்குட்படக் கூடாதென்பதில் குறியாகவுள்ளார் என்பதாகும். அவர் இந்தியாவுக்காக இவ்வரசையும் பலி கொடுக்கத்தயார். இன்று இப்படி சிறந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்களே நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here