ஓட்டமாவடி போதை மாத்திரை வியாபாரி கைது

0
272

01 (2)கல்குடா செய்தியாளர்
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இரண்டு சம்பவங்களில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து குளிசை வியாபாரியும், வாழைச்சேனைப் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

வாழைச்சேனை குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினரால் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஓட்டமாவடி பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக குளிசை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியர் ஒருவரின் மகனிடமிருந்து 120 போதை மாத்திரைகள் மற்றும் எட்டு கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, வாழைச்சேனைப் பகுதியில் மீன்பிடி உபகரணக் கடையை உடைத்து திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனையைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக சட்டவிரோதமான செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், அதனைத்தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here