மட்டக்களப்பில் சர்வதேச முதியோர் தின விழா

0
327

01 (2)கல்குடா செய்தியாளர்
முதுமைக்குள் புதுமை காண்போம் என்ற தொனிபொருளில் சர்வதேச முதியோர் தின விழா மட்டக்களப்பு மகா ஜனக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட முதியோர் சம்மேளனத்தின் தலைவர் க.நடேசன், செயலாளர் கி.சிவபாலன். பொருளாளர் ஞா.பேரின்பம் மாவட்ட முதியோர் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எம்.சாந்தி முகைதீன். உப செயலாளர் கோ.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிதிகளாக சிரேஸ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் மற்றும் மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.விஸ்வகோகிலன், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட முதியோர் சம்மேளன மற்றும் பிரதேச, கிராம மட்ட முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள், இல்ல நிருவாகிகள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த முதியோர்கள்,  சங்கங்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

கலை நிகழ்வுகளில் சென் ஜோசப் இல்ல முதியோர்களின் பாண்ட் வாத்திய இசை சிறப்பிடத்தை வகித்தது. அத்துடன், முதியவர்களின் நடனம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று வாழைச்சேனை முதியோர் சங்கத்தினரின் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கான ஆடல் முதியோர்களின் திறன்களைப் பறைசாற்றியதுடன் இன்றைய இளையோருக்கு சவால் விடுத்ததையும் அவதானிக்க முடிந்தது.

கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து நிகழ்வுகளை நடாத்தியிருந்தது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here