தேர்தல் வருவதால் சிலருக்கு மீண்டும் தாஜூதீன் நினைவுக்கு வந்துள்ளார்.

Presentation1தாஜுதீனின் மரணத்தை அரசியல் மூலதனமாக்கி அரசியல் வியாபாரம் செய்வதை விட கேவலமான செயல் எதுவுமல்லவென பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னண்டோ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவர் அநியாயமாக கொலை செய்யப்படும் போது அது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளி தண்டிக்கப்படல் வேண்டும் என்பதில் யாருக்கும் சிறிதளவேனும் மாற்றுக்கருத்து இருக்காது. இது தாஜுதீனோடு மாத்திரம் நின்று விடாது அழுத்கமையில் கொல்லப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வரை அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இன்று தாஜுதீனை பற்றி பேசுபவர்களுக்கு அளுத்கமை கலவரத்தில் மரணமடைந்தவர்கள் நியாபகத்துக்கு வருவதில்லை. அதனை தூக்கிப் பிடிப்பது யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போடும் செயலைப் போன்றதென்பதை அவர்கள் நன்கே அறிவார்கள்.

சில வருடங்கள் முன்பு தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.அன்றே இக் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புத்திரர்களை சம்பந்தப்படுத்தி கதைகளை பரப்பி இருந்தார்கள். அது எதற்கு எடுத்தாலும் கொந்தராத்துகாரர்கள் முன்னாள் ஜனாதிபதியை விமர்சிக்கும் காலமாகும். இதனையும் அரசியலுக்காக நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள்.

இது கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களிலும் முதன்மை இடம் வகித்தது. இவ்வாட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்து தாஜுதீன் மரணத்தை எப்படியெல்லாம் விசாரிக்க முடியுமோ அத்தனை வகையிலும் விசாரித்தார்கள். அவர்கள் நினைத்ததை போன்று முன்னாள் ஜனாதிபதியின் புத்திரர்கள் மீது கைவைக்க முடியவில்லை.ஏன் என்றால் அவர்களுக்கும் தாஜுதீன் மரணத்திற்கும் சம்மந்தம் இல்லை.

அண்மையில் இந்த விடயத்தைப் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் வார்த்தைகளால் விமர்சித்தீர்கள். ஆளும் கட்சியாக இருக்கும் போதும் வார்த்தைகளால் விமர்சிக்கின்றீர்கள். அப்படியானால் எதற்கு ஆட்சியமைத்தீர்கள். இனி இது பற்றிப் பேசாது தகுந்த நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

அப்போது மக்கள் உண்மைகளை அறிந்துகொள்வர். அவ்வாறில்லாமல் வெற்று வார்த்தைகள் மூலம் விமர்சிக்க முஜீபுர் ரஹ்மான் போன்றோர் வெட்கப்பட வேண்டும். அல்லது அவர் இவ்வரசுக்கான தனது ஆதரவை விலக்கி இப்படியான விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். இனி யாராவது இது தொடர்பில் விமர்சிப்பதாக இருந்தால் இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசியே குற்றம் சுமத்த வேண்டும்.

இவற்றை விட்டால் இவ்வாட்சியாளர்களால் அரசியல் செய்ய முடியாது. இதனைப் பற்றி மீள பேசிப் பேசி அவர்கள் குடும்பத்தினரதும் மனங்களை இவ்வாட்சியாளர்கள் நோகடிக்கின்றனர். அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு தாஜுதீனின் மையத்தில் ஏறி நின்று அரசியல் செய்வதை விட கேவலமாக செயல் வேறு எதுவுமல். இதனை முஜீபுர் ரஹ்மான் போன்றோர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

joint opposition tamil media unit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>