கல்குடா முஸ்லிம்களுக்கு தனித்தேர்தல் தொகுதி வேண்டும்-அமைப்பாளர் றியாழ் சார்பாக ஆணைக்குழுவுக்கு அறிக்கை

0
240

23476788_2003533989860210_1468517779_nஅரசியலமைப்பின் உள்ளூராட்சி மாகாண சபை திருத்தத்தின் பிரகாரம் நடைபெறவிக்கின்ற மாகாண சபைத்தேர்தலில் கல்குடா முஸ்லிம்களுக்கு தனித்தேர்தல் தொகுதி கோரி நேற்று 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணைக்குழு முன் தோன்றி சாட்சியமளிக்கப்பட்டது.

கல்குடாத்தொகுதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் அதியுயர்பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.ரியாழ் அவர்களின் முன்மொழிவுகள் அடங்கிய ஆவணங்கள் குறிப்பிட்ட ஆணைக்குழுவினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்காக றியாழ் அவர்களின் சார்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான முஹாஜிரீன் அவர்களும் இணைப்பாளர் எ.எம்.றபீக் அவர்களும் கலந்து கொண்டு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.

வாய்மொழி மூலமாக ஆணைக்குழுவினருக்கு முதலில் விளக்கமளிக்கப்பட்டு பின்னர், எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டதிலே கல்குடாத்தொகுதியில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு அத்தொகுதியிலே கல்குடா மத்தி என்ற தனித்தொகுதி கோரி மேற்படி முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

முஸ்லிம்கள் செறிந்து வாழுகின்ற கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளை மத்தி பிரதேசங்களைப் பிரதானமாக உள்ளடக்கிய தனித்தொகுதி கோரியே இந்த முன்மொழிவினை அமைப்பாளர் றியாழ் பரிந்துரை செய்தார்.

சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவினர் இந்த முன்மொழிவிலுள்ள சாதகத்தன்மையினை ஏற்றுக்கொண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். நடைபெறவிருக்கின்ற எல்லை நிர்ணயத்தின் போது, இந்த முன்மொழிவுகள் கவனத்திற் கொள்ளப்படுமென்ற நம்பிக்கையினையும் அவர்கள் அளித்திருந்தனர்.

குறிப்பாக ஆறு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டம் பிரிக்கப்படுகின்ற போது, கல்குடா முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி ஏற்படுத்திக் கொடுப்பதற்குரிய வாய்ப்புக்கள் அனேகமாகக் காணப்படுவதாகவும், இந்த முன்மொழிவினை ஆராய்ந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.23476448_2003534226526853_125044205_n 23476592_2003533999860209_822380252_n 23476768_2003534049860204_1987539308_n 23548201_2003534106526865_950933429_n23548177_927325827415411_1466110159_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here