"கல்குடா மத்தி" புதிய தொகுதியொன்றைக்கோரி மாகாண தொகுதி நிர்ணய ஆணைக்குழுவிடம் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழினால் முன்மொழிவு சமர்ப்பிப்பு

0
189

DSCN9517ஊடகப்பிரிவு
மாகாணத்தொகுதி நிர்ணயம் செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

மாகாணத்தொகுதி நிர்ணயம் செய்வது தொடர்பில் பொது மக்கள், கட்சிகளின் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக வருகை தந்த ஆணைக்குழுவிடம் அமைப்பாளரின் சார்பில் அவரது பிரதிநிதிகள் இம்முன்மொழிவினைச் சமர்ப்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (10.11.2017) அன்று அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக ஆணைக்குழு வருகை தந்திருந்தது. இதன் போதே, இம்முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கல்குடா மத்தி எனும் பெயரில் புதிய தொகுதியொன்றை அமைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதி 44 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் 06 தொகுதிகளாக எல்லைப்படுத்தப்படவுள்ளன. இதில் மாவட்ட இன விகிதாசாரத்திற்கேற்ப தமிழ் பிரதிநிதிகள் நால்வர் தெரிவு செய்வதையும், முஸ்லிம் பிரதிநிதிகள் இருவர் தெரிவு செய்வதற்கான நியாயங்கள் இம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்குடா மத்தி எனப்பெயர் குறிப்பிட்டு முன்மொழியப்பட்டுள்ள தொகுதியிலிருந்து முஸ்லிம் பிரதிநிதி தெரிவு செய்வதற்கேற்ப இம்முன்மொழிவு தயாரிக்கப்பட்டு, ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை முஸ்லிம் சனத்தொகையையும், ஏனைய இனத்தவர்களையும் உள்ளடக்கியதாகத் தாயாரிக்கப்பட்டுள்ள இம்முன்மொழிவினை ஆணைக்குழு வரவேற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் 06 தொகுதிகளாக எல்லைப்படுத்தப்பட்டு தொகுதிவாரியாக ஆறு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், விகிதாசாரத்தேர்தல் முறை மூலம் ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.01(1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here