இலக்கியம் தெரியாத அரசியல்வாதிகளால் சமுதாயத்துக்கு எந்தப்பயனுமில்லை- உலமாக்கட்சித் தலைவர்

0
90

23376127_442836679445324_5559732113924818258_nஇலக்கியவாதிகள் சமுதாய நோக்குடையவர்கள், எனவே, அவர்கள் அரசியலுக்கு வர வேண்டியவர்களாகவுள்ளனர் என்று உலமாக்கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜித் தெரிவித்தார்.

பரீட்சன் எழுதிய “முரண்பாட்டு சமன்பாடுகள்” என்கிற கவிதை நூல் வெளியீட்டு அறிமுகமும், இந்நூல் மீதான வாசிப்பு அனுபவப்பகிர்வும் அகர ஆயுதம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாருக்கின் தலைமையில் நிந்தவூர் பொது நூலகக்கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற போது, இதில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

இன்று நூல் வெளியீட்டு விழாக்கள் கொழும்பில் பெரிய பெரிய ஆடம்பர ஹோட்டல்களில் நடத்தப்படுகின்றன. இதனால் புத்தகத்தை அச்சேற்றுகின்ற செலவை விட வெளியீட்டு விழாக்களுக்கான இட ஏற்பாட்டுச்செலவு பல பல மடங்குகள் அதிகமானதாகவுள்ளது.

மேலும், இவ்வாறான ஆடம்பர வெளியீட்டு விழாக்களுக்கு அரசியல்வாதிகள் பேராளர்களாக அழைக்கப்படுகின்ற வழக்கமும் பெருமைக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், இவ்வாறு அழைக்கப்படுகின்ற அரசியல்வாதிகளுக்கும், இலக்கியத்துக்கும் அறவே சம்பந்தமிருப்பதில்லை. அத்தோடு, நூல் வெளியீட்டு விழாக்களில் நடந்து கொள்கின்ற விதம் குறித்தும் அவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

இலக்கியவாதிகள் சமுதாய நோக்குடையவர்கள். சமுதாய நோக்குடையவர்களால் தான் சிறந்த அரசியல்வாதிகளாக மிளிர முடியும். ஆகவே தான் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் போன்றோரால் சிறந்த அரசியல்வாதிகளாக மிளிர முடிந்தது.

மறுபக்கத்தில் இலக்கியம் தெரியாத அரசியல்வாதிகளிடம் சமுதாய நோக்கைக் காண முடியாதிருக்கின்றது. இலக்கியம் தெரியாதவர்களை அரசியல் தலைவர்கள் ஆக்கியதன் தவறையே இன்று சமுதாயம் அனுபவித்து வருகின்றது. இலக்கியவாதிகள் சமுதாய நோக்குடையவர்களாக இருப்பதால், அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டியவர்களாகவுள்ளனர்.

பரீட்சன் “எழுதிய முரண்பாட்டு சமன்பாடுகள்” கவிதை நூலின் வெளியீட்டு விழா ஆரவாரம் எதுவுமில்லாமல், அமைதியான முறையில், மிக எளிமையாக, உண்மையான இலக்கிய ஆர்வலர்களின் முன்னிலையில் இடம்பெறுவது மன நிறைவைத் தருகின்றது.

நூலாசிரியர் பரீட்சன் பதிலுரை ஆற்றிய போது தெரிவித்தவை வருமாறு:-

எனது கொப்பளிப்புகளையே கவிதைகளாகக் கிறுக்கி இருக்கின்றேன். அவை இயல்பானவை. மாறாக, திட்டமிடப்பட்ட முறையில் புனையப்பட்டவையல்ல. எந்தவொரு படைப்பாளியும் விமர்சனத்துக்குப் பின்னால் செல்லக்கூடாதென்பது எனது நிலைப்பாடாகும். படைப்பாளி விமர்சனத்துக்குப் பின்னால் செல்கின்ற போது, படைப்பின் இயல்பு தன்மை கெட்டுப்போய் விடுமென்று  நான் விசுவாசிக்கின்றேன்.23376127_442836679445324_5559732113924818258_n 23376497_442835499445442_4280454378549373309_n 23380100_442835362778789_5530148616337429012_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here