மீராவோடை மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் சாதனையாளர் கௌரவிப்பு விழா

0
294

WhatsApp Image 2017-10-29 at 7.51.18 PMஎஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி-மீராவோடை மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.

ஒன்றியத்தின் பிரதித்தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைட், மீராவோடை மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச கல்வியலாளர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொது மக்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மீராவோடை பிரதேசத்தில் அதிபர் சேவைக்கு சித்தியடைந்தவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், கல்வி நிருவாக சேவைக்கு சித்தியடைந்தவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம், மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம், பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம், மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலயம் ஆகியவற்றில் ஐந்தாம் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சேவையைப் பாராட்டி மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.WhatsApp Image 2017-10-29 at 7.50.20 PM WhatsApp Image 2017-10-29 at 7.50.40 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.50.40 PM WhatsApp Image 2017-10-29 at 7.50.51 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.07 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.06 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.04 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.01 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.01 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.11 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.10 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.10 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.09 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.08 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.14 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.14 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.13 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.12 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.12 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.18 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.17 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.17 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.16 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.15 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.21 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.21 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.20 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.19 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.19 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.22 PM WhatsApp Image 2017-10-29 at 7.51.23 PM(1) WhatsApp Image 2017-10-29 at 7.51.23 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here