மாகாண சபை எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவில் மட்டக்களப்பில் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொண்டது

0
220

DSC01580எஸ்.எம்.எம்.முர்ஷித்

கடந்த வெள்ளிக்கிழமை (10.11.2017) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மாகாண சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.தவலிங்கம் தலைமையில் இக்குழு இந்த முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டது.

இதன் போது, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான கே.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேந்திரன், பொன் செல்வராசா மற்றும் முன்னாள் மாகாண சபை பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ், சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடாக்கிளை மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் பிரிவுத்தலைவி திருமதி செல்வி மனோகரன் மற்றும் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு, ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல்கள் உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு தமிழ், முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள் தமது முன்மொழிவுகளை இதன் போது முன் வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் ஆறு தொகுதிகளாகப் பிரிக்கப்படவுள்ளன. இந்த ஆறு தொகுதிகளையும் பிரிப்பதற்காகவே இந்த முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.தவலிங்கம் தெரிவித்தார்.DSC01503 DSC01507 DSC01510 DSC01512 DSC01513 DSC01515 DSC01518 DSC01519 DSC01521 DSC01526 DSC01531 DSC01534 DSC01537 DSC01544 DSC01546 DSC01553 DSC01560 DSC01562 DSC01566 DSC01568 DSC01570 DSC01580 DSC01582

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here