கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காணி வீட்டுரிமைப் பத்திரம் வழங்கிவைப்பு.

0
156

(அஷ்ரப் ஏ சமத்)

d4தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு வாழ் மக்களது காணி வீட்டுரிமைப் பத்திரம் 2300 குடும்பங்களுக்கு நேற்று (14) அலரி மாளிகையில் வைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவா்களினால் பகிா்ந்து அளிக்கப்பட்டது. கடந்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் காணித்துண்டுகள், தொடா்மாடி வீடுகள் தங்கியிருப்போருக்கான உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சா் சஜித் பிரேமதாசா அவா்களின் சமட்ட செவன சகலருக்கும் நிழல் எனும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவ் உறுதிப்பத்தரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அமைச்சா்காளான தயா கமகே, மேல் மாகாண ஆளுனா், பிரதியமைச்சா் .இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபையின் தலைவா் சாகர பலன்சூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here