ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக எச்.எம்.எம்.ஹமீம் பதவியேற்பு

0
206

(கல்குடா செய்தியாளர்)

DSCN9960ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.எம்.ஹமீம் இன்று (14.11.2017) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இவர் ஏறாவூர் நகரசபையின் செயலாளராக ஏழு வருடங்களும் ஐந்து மாதங்களும் கடமை புரிந்து வந்த எச்.எம்.எம்.ஹமீம் சிறந்த நிருவாக சேவை காரணமாக அவரது காலத்தில் ஏறாவூர் நகர சபை தேசியத்தில் பல விருதுகளை தனதாக்கிக் கொண்டது.

எதிர் காலத்தில் இவரது வழிகாட்டலில் ஓட்டமாவடி பிரதேச சபையும் தேசியத்தில் பல விருதுகளை பெற்று தனது பெயரை மேலோங்கச் செய்யும் என்று பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறந்த நிருவாக சேவை அதிகாரியான எச்.எம்.எம்.ஹமீம் ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாடி பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.சர்வேஸ்வரன் இன்று (14.11.2017) வாகரை பிரதேச சபையின் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here