நாட்டின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் புகைத்தல் தடை செய்யப்பட வேண்டும்-தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்

0
245

இலங்கை எமது நாடு - ஐக்கியம் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடனும் வர்த்தக சங்கங்களின் ஆதரவுடனும் முஸ்லிம் பிரதேசங்களில் புகைத்தல் பாவனையைத் தடை செய்யத்தீர்மானம் நிறைவேற்றுமாறு இயக்கம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறது.

எதி்ர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மக்கள் இதற்காக களமிறங்குமாறும் எம்மைப் பீடித்துள்ள புகைப்பாவனையை விட்டுத்துரத்த நாம் ஒன்றிணைய வேண்டும்.

சிகரெட், பீடி, கஞ்சா சுறுட்டு, மது, கள்ளச்சாராயம், போதையான சீசா போன்ற பாவனை இன்று நமது முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அதிகமுள்ளது. இதற்கு தகுந்த சட்டம் நிறைவேற்றினால், இதனைத்தடுக்க முடியும். இதற்கு உதாரணமாக காத்தான்குடி நகர சபையை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் பிரதேசத்தில் இந்த விற்பனையில்லை. அவர்களுக்கு எமது இயக்கத்தின் வாழ்த்துக்கள்.

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் ஒன்றான புகைத்தலுக்கெதிரான இத்தீர்மானத்தை நாமும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலும் இது ஹராமான வியாபரம் என்ற அடிப்படையலும் உடன் நடைமுறைப்படுத்த முன்வர நடவடிக்கையெடுப்போம்.

ஊடகப்பிரிவு,
தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here