வாகரைப் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஜே. சர்வேஸ்வரன் நியமனம்

0
248

SDW_8913எம்.ரீ.ஹைதர் அலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு – வாகரைப் பிரதேச சபையின் புதிய செயலாளராக கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய ஜே. சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், நேற்று 2017.11.14ஆந்திகதி – செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதே நேரம், ஏறாவூர் நகர சபையின் செயலாளராகக் கடமையாற்றிய எம்.எச்.எம். ஹமீம் கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இருவரும் தங்களது காலங்களில் எதுவிதமான பாகுபாடுகளுமின்றி திறன்பட பிரதேச சபைகளை சிறந்த முறையில் வழிநடாத்தி மக்களுக்கான சேவைகளை வழங்கியிருந்தனர் என்பதுடன், இவர்கள் மக்களுக்காற்றிய சேவைகள் பெரிதும் போற்றக்கூடியதாகும். SDW_8911 SDW_8912 SDW_8913

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here