ஓட்டமாவடி ஹனான் அமீன் தேசிய ரீதியில் சாதனை

23574331_1911345478890768_1172302460_nஆதம் றிஸ்வின்
ஓட்டமாவடியைச்சேர்ந்த பௌசுல் அமீன் (பாராளுமன்ற உத்தியோகத்தரின்) மகள் மாணவி ஹனான் அமீன் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் (தமிழ்மொழி) ஆரம்பப்பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று எமது ஓட்டமாவடி மண்ணுக்கும் எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் மாகாண மட்டத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்று, தேசிய ரீதியில் இந்த சாதனயை எட்டியுள்ளார்.

ஓட்டமாவடி மக்கள் சார்பாக இம்மாணவிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இன்னும் பல சாதனைகளைப் புரியப்போதுமான ஆற்றல்களை இறைவன் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.

இந்த மாணவி கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் தற்போது தரம்-5இல் கல்வி கற்று வருகின்றார். கிழக்கு மாகாணத்தைப்போன்று சிறந்த மேலதிக கற்கை வசதிகள் கிடைக்காத போதிலும், இவ்வாறானதொரு சாதனையை மாணவி ஹனான் அமீன் படைத்துள்ளமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு, இந்த மாணவியின் தந்தை பௌசுல் அமீன் அவர்கள் எமது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதோடு, அவரும் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாராளுமன்ற சேவை உத்தியொகத்தராகக் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பிறந்த மண்ணிலிருந்து தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்து தலைநகருக்குச் சென்றிருந்தாலும், ஓட்டமாவடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது மகள் சாதனை படைக்குமளவுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பௌசுல் அமீன் மற்றும் அவரது துணைவியாரையும் பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

போட்டிகளில் வெற்றி பெற்றமைக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படவிருப்பதாகத் தெரிய வருகிறது. 23574331_1911345478890768_1172302460_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>