சாய்ந்தமருதுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்னர் வில்பத்து வர்த்தமானியை ரத்து செய்யவும்..

0
296

unnamed (1)அசாத்சாலி வில்பத்து வர்த்தமானி விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுத்தது போன்றா சாய்ந்தமருது மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கப் போகிறார்?

வில்பத்து வர்த்தமானியை மீள பெறச் செய்து வடக்கு மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தது போன்றா சாய்ந்தமருது மக்களுக்கு அசாத் சாலி உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொடுக்கப்போகிறார் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

அசாத் சாலி, இலங்கையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அங்கு தனது மூக்கை நுழைத்து குட்டையை குழப்பிவிடுவதில் வல்லவர். சில மாதங்கள் முன்பு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பிழையான வர்த்தமானியை மீளப் பெறுமாறு அப் பிரதேசத்து மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதில் மூக்கை நுழைத்த அசாத்சாலி, ஜனாதிபதி தீர்வுக்கு இணங்கியுள்ளதாக கூறி அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஜனாதிபதிக்கு இருந்த பெரும் அழுத்தத்தை இல்லாமல் செய்திருந்தார்.

இருந்த போதிலும் இன்றுவரை அந்த மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அப்படியானால், அந்த மக்கள் மாதக் கணக்கில் போராட்டம் நடத்தியதுக்கு என்ன பயன்?

இப்போது இவர் சாய்ந்தமருது விடயத்தில் மூக்கை நுழைத்துள்ளார். இதனை இவர் சென்றுதான் தீர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. அம்பாறை மாவட்டத்தில் பல கட்சிகளை சேர்ந்த பிரதிநிகளும் உள்ளனர். இவருக்கு அதன் ஆழ அகலம் பற்றி எதுவுமே தெரியாது. சாய்ந்தமருது மக்கள் இவரை ஏன் இவ்விடயத்தில் நுழைத்தார்கள் என்று தெரியவில்லை. இவ்விடயத்தில் இவர் தலையை நுழைத்திருப்பதானது ஆபத்தானது.

இவர் பிரச்சினை முடிப்பது போன்று அனைத்தையும் செய்வார். இறுதியில் தான் தெரியவரும் வேறு ஒருவரும் அஜன்டாவில் இவர் இயங்கிக்கொண்டிருப்பது.

சாய்ந்தமருது மக்கள் சுயேட்சை போன்ற மாற்று வழிகளை கையாள்வதால் அவற்றை தடுக்கும் நோக்கிலும் இவர் காய் நகர்த்தலாம். சாய்ந்தமருது மக்கள் இவர் தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும். இப்படித் தான் பலரை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்’ என இபாஸ் நபுஹான் குறுப்பிட்டுள்ளார்.

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here