இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பான கூட்டம் லண்டனில்!

0
244

(அஷ்ரப் ஏ சமத்)

IMG_1072உலக சுற்றுலாத்துறை மற்றும் ஆகாயம் மார்க்கமான பிரயாண முகவா்கள் கடந்த நவம்பா் 6 – 8 ஆம் திகதி வரை லண்டனில் கூட்டம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இங்கு சுற்றுலாத்துறை மற்றும் பிரயாண முகவா்கள் 5000க்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் வைக்கப்பட்டிருந்தன. உலக நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறை மற்றும் ஆகாய, கடல், தரை மாா்க்கமான பிரயாணங்கள் பற்றி தெளிவுபடுத்தப்படும்

இலங்கை சாா்பாக சுற்றுலாத்துறை அமைச்சா் ஜோன் அமரதுங்க தலைமையில் துாதுக்குழுவொன்று இம் மாகாநாட்டிக்கு பங்குபற்றச் சென்றது. இதில் சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவா் மற்றும் கிழக்கு சுற்றுலா பற்றி தெளிவுபடுத்துவதற்காக கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபை சாா்பாக சர்ஜுன் அபுபக்கா் சென்றிருந்தாா்.

சர்ஜூன் அபுபக்கா் – இலங்கையின் உயா் ஸ்தானிகராக லண்டனில் கடமையாற்றும் திருமதி அமரி விஜயவா்த்தனாவைச் சந்தித்து கிழக்கு மகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை போன்ற மாவட்டங்களில் சுற்றுலாத்துறை இயற்கையான கடற்கறைகள், களப்புக்கள் பற்றிய வெளிநாட்டு சுற்றுலாத்துறையாளா்கள் அங்கு வரவலைத்தல், அத்துறையில் முதலீடு செய்வதற்காக பிரித்தாணியாவில் உள்ள முதலீட்டாளா்களை வரவளைத்தல் போன்ற விடயங்களை கலந்துரையாடினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here