முன்னாள் அமைச்சர் கே.துரைராசசிங்கத்தின் நிதியில் மட்டு.இந்துக்கல்லூரியில் கார்பெட் முற்றம்

0
237

20171117_094843கல்குடா செய்தியாளர்
கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சி மற்றும் வழிகாட்டலின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 4.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கார்பெட் முற்றம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டு.இந்துக்கல்லூரியில் அதிபர் முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் எந்திரி தர்மரெட்ணம், பிரதம பொறியியலாளர் எந்திரி பத்மராஜா நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி சசிநந்தன், வலயக் கல்விப்பணிப்பாளர் பாஸ்கரன், கோட்டைக் கல்விப்பணிப்பாளர் அருள்பிரகாசம், மட்டக்களப்பு மாநகரப் பிரதி ஆணையாளர் தனஞ்செயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை சமூகத்தின் வேண்டுகொளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் அவர்கள் மத்திய வீதி அபிவிருத்தியமைச்சருடன் தொடர்பினை ஏற்படுத்தி வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக இப்பாடசாலைக்கான கார்பெட் முற்றம் அமைக்கும் செயற்றிட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுற்ற நிலையில், நேற்றைய தினம் இம்முற்றம் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

இதே போன்று, முன்னாள் அமைச்சரின் முயற்சியின் மூலம் 01 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் கார்பெட் முற்றம் அமைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 20171117_094733 20171117_094843 20171117_094938 20171117_100034 20171117_100130 20171117_100218 20171117_100549 20171117_102527 20171117_103402 20171117_104117

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here