டெங்கற்ற பாடசாலைத்தெரிவுப் போட்டியில் ஓட்டமாவடி தாருல் உலூம் வெற்றி

0
280

IMG-20171117-WA0023 (Medium)எம்.ரீ.ஹைதர் அலி
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 2017ஆம் ஆண்டுக்கான டெங்கற்ற பாடசாலைத் தெரிவுப்போட்டியில் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் மூன்றாமிடத்தினைப் பெற்றுள்ளது.

இதற்கான பரிசளிப்பு நிகழ்வு 2017.11.17ஆந்திகதி ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். தாரிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலத்திற்கான நினைவுச்சின்னம் மற்றும் நற்சான்று பத்திரம் என்பனவற்றை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். தாரிக் அவர்கள் பாடசலை சுகாதாரக்கழகப் பொறுப்பாசிர்கள் எம்.எல். ஜாபிர் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு ஏனைய விருந்தினர்களாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம். ஜூனைட், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்காக பங்களிப்புச்செய்த பிரதி அதிபர் எம்.எல்.எம். முஹாஜிரீன், பாடசாலை சுகாதாரக்கழக பொறுப்பாசிரியர்கள் என்.எல். ஜாபிர், திருமதி ஹைதர், ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை சுகாதாரக்கழக மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைஸல் தனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டார்.

2017ஆம் ஆண்டுக்கான டெங்கற்ற பாடசாலைத் தெரிவுப்போட்டியில்  முதலாமிடத்தினை ஓட்டமாவடி மத்திய கல்லூரியும், இரண்டாமிடத்தினை பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.IMG-20171117-WA0022 (Medium) IMG-20171117-WA0023 (Medium) IMG-20171117-WA0026 (Medium) IMG-20171117-WA0032 (Medium)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here