வாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

0
150

01 (12)கல்குடா செய்தியாளர்
வாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

சங்கச்செயலாளர் எஸ்.சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக வாழைச்சேனை கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சசிகரன், வாழைச்சேனை மாதர் சங்கத்தலைவி திருமதி.பி.செல்வக்குமார், சங்கப்பொருளாளர் க.ஜெகதீஸ்வரன், சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தினால் சேவாபியச திட்டத்தின் கீழ் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் பொதுக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

வாழைச்சேனைப் பகுதியில் பொதுக்கட்டடமின்றி அரச சேவை அதிகாரிகள் பல்வேறுபட்ட இடங்களில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வந்தனர். இதன்படி தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கத்தின் நடவடிக்கையில் இப்பொதுக்கட்டடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.01 (1) 01 (2) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here