ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி

0
392

indexஊடகப்பிரிவு OBA QATQR
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்குமுகமாக கட்டார் மற்றும் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களினதும், நலன்விரும்பிகள், தனவந்தர்களின் ஒத்துழைப்பு, நிதிப்பங்களிப்போடு மாணவர்களின் போக்குவரத்து தேவைக்காக பஸ் வண்டியொன்றினைக் கொள்வனவு செய்து வழங்க ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை பல்வேறு முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடரில், கட்டார், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலுள்ள எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு பெறும் நோக்கில் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, இத்திட்டத்தின் அவசியம் கருதி பல சகோதரர்கள் எம்மோடு இணைந்து பணியாற்றி வருவதுடன், குறித்த நாடுகளிலுள்ள பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றமைமையைக் குறிப்பிட்டாக வேண்டும்.

அத்துடன் நின்று விடாது, தங்களின் தனிப்பட்ட நிதிப்பங்களிப்புகளை வாரி வழங்கி வருவது எமது திட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இதன் தொடரில், ஐக்கிய இராஜ்ஜியத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.காதர் அவர்களின் புதல்வருமான சகோதரர் M.A.C.M.மர்சூக் (MCMI,ACMI (UK) Accounts  Manager, Tesco international UK) அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.

குறித்த சகோதரரின் அன்பளிப்பு ஒரு இலட்சம் ரூபாய் எமது பஸ் கொள்வனவுத்திட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு கணக்கில் இதுவரை இறுதி இருப்பாக 1,755,633 இலங்கை ரூபாய்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கணக்கு தொடர்பான மேலதிக விபரங்களை எமது கணக்காளர் சகோதரர் எம்.பி.எம்.இஸ்ஸத் (தொலைபேசி- 66031219, மின்னஞ்சல்-issath1977@yahoo.com, வட்ஸ்அப்- 66031219) அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு இப்பாரிய நிதியினை அன்பளிப்புச் செய்த சகோதரர் ஏ.சி.மர்சூக் அவர்களுக்கு பாடசாலைச்சமூகம் சார்பாகவும், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை மற்றும் சர்வதேசமெங்கும் வாழும் பழைய மாணவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் அவருக்கு பொருளாதார வசதி, தேக ஆரோக்கியத்தை வல்ல இறைவன் வழங்க வேண்டுமென பிரார்த்தனை புரிகின்றோம்.

அத்துடன், எமது பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு சவூதி அரேபியாவிலுள்ள NADA நிறுவனத்தில் வைத்தியராகப் பணி புரியும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த Dr.சித்தீக் அவர்களும் மேலும் பல சகோதரர்களும் நிதியுதவி வழங்கி எமது திட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தமை இவ்விடத்தில்  நினைவு கூறத்தக்கது.

அத்தோடு, எமது பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கான மேலதிக நிதிச்சேகரிப்பில் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான முக்கிய செயற்பாட்டாளராக சகோதரர் மர்சூக், சகோதரர் றபாய்தீன் ஆகியோர் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.  இதே போன்று, எமது குறித்த நன்னோக்கத்தை மிக விரைவில் நிறைவு செய்வதற்காக நாம் பல முனைப்புகளை இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றோம்.

ஆகவே, எமது திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான பணவுதவிகளை நலன்விரும்பிகள், தனவந்தர்கள், சர்வதேசமெங்கும் பரந்துள்ள எமது பாடசாலையின் பழைய மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here