கல்முனை ஹூதா அழைப்பு வழிகாட்டலினால் ஜனாஸா சட்டங்கள் விளக்க வகுப்பு.

0
258

(எஸ்.அஷ்ரப்கான்)

fஇஸ்லாமிய அடிப்படையில் ஜனாஸா சட்டங்கள் விளக்க வகுப்பு கல்முனை ஹூதா அழைப்பு வழிகாட்டல் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (17) கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன்போது குளிப்பாட்டல், கபனிடல், தொழுகை நடாத்தல், நல்லடங்கம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான செயன்முறைகளை மெளலவி- ஜே.எம்.சாபித் ஷரயி அவர்கள் விளக்கினார்கள்.

இங்கு ஆண்கள் பெண்கள் இரு சாராரும் ஜனாஸா குளிப்பாட்டல், கபனிடல், தொழுகை நடாத்தல், நல்லடங்கம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான தங்களது சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபெற்றுக் கொண்டனர்.

இவ்விளக்க வகுப்பில் ஹூதா பள்ளிவாயல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என நுாற்றுக்கணக்கான பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here