டெங்கு பெருகும் சூழலற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில் வாழைச்சேனை ஆயிஷாவிற்கு முதலிடம்.

0
274

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

eec6e0df-c96b-47bf-9efb-141478e39e40கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட டெங்கு பெருகும் சூழலற்ற பாடசாலைகளுக்கான தெரிவுப் போட்டியில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் தனது பாடசாலையின் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்ததன் காரணமாக வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்டு முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ. நஜீப்கான் அவர்களின் தலைமையில் (16)ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய தொற்றுநோய்ப் பிரிவு வைத்தியர் தர்சினி காந்த ரூபன், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளின் செயலாளர்கள் பாடசாலை அதிபர்கள், திணைக்கள அதிகாரிகல் எனப்பலரும் கலந்து கொண்டனர். முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.0da06ec9-d8af-4a95-bf6f-d1227a407fda 90be4406-62c3-475c-8f3f-bc11481be8a2 eec6e0df-c96b-47bf-9efb-141478e39e40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here