செம்மண்ணோடை அல் ஹம்றாவுக்கு மூன்று இலட்சம் தருவதாக ஹனீபா (மம்மலி) விதானை வாக்குறுதி (வீடியோ)

0
137

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலையில் நேற்று 19.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலின் இணைத்தலைவருமான ஹனீபா (மம்மலி) விதானை மூன்று இலட்சம் ரூபாய்களை பாடசாலையின் சுற்று மதில் அமைப்பதற்கு உடனடியாகத்தருவதாக கொடுத்த வாக்குறுதி அரசியல் ரீதியாக மம்மலி விதானையின் காய்நகர்த்தலினையும், அவர் பிரதேச, சமூக ரீதியாக அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டினையும் எடுத்துக்காட்டும் விடயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்குடாத்தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் எச்.எம்.எம் றியால் அவர்களும் கலந்து கொண்டார்.

பாடசாலையின் அதிபதிபர் எம்.எஸ்.சுபைதீன் உரையாற்றுகையில்,

அமைப்பாளர் றியாழிடம் பாடசாலைக்கு அவசியத் தேவையாகவுள்ள சுற்றுமதில், மூன்று மாடியுடனான ஆராதனை மண்டபத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துரைத்து பெற்றுத்தருமாறு வைத்த வேண்டுகோளினைச் செவிமடுத்த ஹனீபா (மம்மலி) விதானை மேற்கூறியவாறு தனது வாக்குறுதியினை உடன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்து, அதனைப் பகிரங்கமாக அதிபர் சுபைதீன் மூலம் குழுமியிருந்த மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல், குறித்த நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களைக் கெளரவிப்பதற்கு தனது பூரண அனுசரணையினை வழங்கிய ஹனீபா விதானை, பிரதேசத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் வளர்ச்சியிலும், சமூக சேவையிலும் பெரும் பங்காற்றி வருவது முக்கிய விடயமாகும்.

அத்தோடு, குறித்த நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக அக்கீல் டயர் வியாபார தள உரிமையாளர் ஏ.எல்.எம்.நியாஸ் ஹாஜி, கல்குடாத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் அமைப்பளர் சபீர் மெளலவி, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மது ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைப்பாளர் றியாழ், பாடசாலையின் அதிபர் முன்வைத்த வேண்டுகோல்களையும் ஏனைய அபிவிருத்திகளையும் மேற்கொள்வது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் பாடசாலை நிருவாகத்துடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

நிகழ்வின் முக்கிய விடயமாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட நிதியினைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலைக்கு உடனடித்தேவையாகவுள்ள காணியின் உறுதியினை உத்தியோகபூர்வமாக பிரதேச கல்வி அபிவிருத்திக்குழுவின் தலைவர் ஜிப்ரியினால் பாடசாலை நிருவாகத்திடன் அதிதிகள் சகிதம் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-நிகழ்வின் காணொளி –
www.youtube.com/watch?v=VkmUQkqa7Ws&feature=youtu.be
01(1) 02 கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here