வாழைச்சேனை வை.அகமட்டில் மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும்-மேலதிக புகைப்படங்களுடன்

0
239

01 (17)கல்குடா செய்தியாளர்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலய ஐந்தாந்தர மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும் கடந்த 18.1.2017ம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக நீதிபதி எம்.ஐ.றிஸ்வான் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப்பணிப்பாளர் என்.சிதம்பரமூர்த்தி, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபீர் கரீம், பிரதேச பாடசாலை அதிபர்கள், தொழிலதிபர்கள், பிரதேச பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஐந்தாந்தர புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற இருபத்தி நான்கு மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் ஐந்தாந்தர மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் ஆகியோர் பெற்றோர்களால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதிகளுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு, ஓய்வு பெற்றுச்செல்லவுள்ள மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப்பணிப்பாளர் என்.சிதம்பரமூர்த்தி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயம் புலமைப்பரீட்சை முடிவின்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இரண்டாமிடமும், ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளதுடன், கடந்த வருடமும் 26 மாணவர்கள் சித்தி பெற்று முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13) 01 (14) 01 (15) 01 (16) 01 (17) 01 (18) 01 (19) 01 (20) 01 (21) 01 (22) 01 (23) 01 (24) 01 (25) 01 (26) 01 (27) 01 (28) 01 (29)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here