இனக்குரோதங்களே முன்னேற்றத்துக்குத்தடை -மீராவோடையில் பிரதியமைச்சர் அமீர் அலி

0
382

01 (10)எஸ்.எம்.எம்.முர்ஷித்
தமிழ், முஸ்லிம் மக்களிடத்தின் பொறாமை, இனத்துவேசமிருந்து கொண்டிருக்குமென்றால், அது எங்களை முன்னேற விடாதென கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ்க்கிராமத்தில் தையல் பயிற்சிநெறியை முடித்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் அணைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு புளியடித்துறை முற்றத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் ஆகியோரிடத்தில் வேறு சிந்தனைகள் உருவாக்கப்படுமாக இருந்தால், முயற்சிக்குத் தடையாக இருக்கும். அந்தத்தடையை அறுபது வருடங்களாகப் பார்த்து விட்டீர்கள். போராட்டம் மற்றும் ஜனநாயகப் பேச்சுவார்த்தை என்று அறுபது வருடம் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்த தமிழ் சமூகத்திடம் எதிர்காலத்தில் தொலைப்பதற்கு எதுவுமேயில்லை.

எதிர்காலத்திலாவது நாங்கள் ஒற்றுமைப்பட்டு எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்ற பேதமையில்லாமல் எல்லோரும் ஒரு வீட்டுப்பிள்ளை என்கின்ற வகையில் கைகோர்த்து வாழ்ந்தால் தான் எமது பிள்ளைகள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ முடியும். எங்களுக்குள் தனிமையான எல்லைகளைப் போட்டுக் கொண்டிருந்தோமால் அந்த எல்லைகளைப் போட்டுக் கொள்ளுகின்ற சமூகமாக இருந்தால் எக்காலத்திலும் முன்னேற்றமடையக்கூடிய சந்தர்ப்பம் கிடையாது.

கடந்த அறுபது வருடங்களாகக் கோடிட்டு உங்களை வாழ வைத்தார்கள். ஆனால், எதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை. வாழ்வாதாரம், தொழில், அபிவிருத்தி, வடிகான் எனப்பல தேவைகள் எதுவும் கிடைக்கவில்லை. இல்லையென்ற பட்டியலே உங்களிடத்தில் நீண்டு கொண்டு செல்கின்றது. இவற்றையெல்லாம் எப்போது பெற்றுக் கொள்கின்றீர்களோ, அன்றிலிருந்து தான் நீங்கள் இதிலிருந்து விடுதலை பெற முடியுமென்பது எனது கருத்தாகும் என்றார்.

மீராவோடை தமிழ் சலவைத்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் தங்கவடிவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உதவித்தவிசாளர் எஸ்.நௌபல், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக்குழு உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியை முடிந்த பன்னிரெண்டு யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் வயோதிபர்களுக்கு தையல் பயிற்சி மூலம் உருவாக்கப்பட்ட ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதியமைச்சரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, சலவைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரினால் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் அணைக்கட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13) 01 (14) 01 (15) 01 (16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here