முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் ஞாபகாா்த்த நுால் வெளியீடு

0
270

ass8(அஷ்ரப் ஏ சமத்)
காலஞ்சென்ற  முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த “அஸ்வா் எ பாலிமென்டேரியன்” நுால் வெளியீடும் அண்மையில் கொழும்பு 07 லுள்ள இலங்கை மன்றக்கல்லுாாியில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை அவா் பதவி வகித்த  அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி, அகில இலங்கை முஸ்லீம் கல்வி மாநாடு, முஸ்லீம் மீடியா போரம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகா் கரு ஜயசூரிய, கௌரவ அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோா் கலந்து கொண்டனா்.

அத்துடன், இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொஹைதீன் அஸ்வா் பற்றி  உரையாற்றினாா். அவா் பற்றிய நுாலினை அவருடைய மைத்துனரான கலாநிதி கரிஸ இசட். டீன் தொகுத்து வெளியிட்டாா். நுாலின் முதற்பிரதியை  ஊடகவியலாளா் இர்சாத் ஏ.காதா் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.

மேலும், முஸ்லீம் அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், ஹலீம், முன்னாள் அமைச்சா் ஏ.எல் எம் அதாவுல்லா உட்பட  முஸ்லீம், பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாட்டுத்துாதுவா்கள், முன்னாள் அமைச்சாின் குடும்ப உறவினா்கள் எனப்பலரும் கலந்து கொண்டனா்.as1 as2 as3 as5 as7 as10 as14 as17 as19 ass8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here