பஸ்-முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் காயம்

0
239

Gகல்குடா செய்தியாளர்

மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியில் கறுவாக்கேணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்து அம்பாரை நோக்கி வந்த தனியார் பஸ்ஸும் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து மீறாவோடைக்குச் செல்வதற்கு கறுவாக்கேணி சந்தியால் திருப்புவதற்கு முயன்ற முச்சக்கர வண்டியில் பின்னால் வந்த பஸ் மோதியதாலயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக வாழைச்சேனைப் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, அப்பகுதியிலுள்ள சில்லறைக்கடையில் பொருட்கள் வாங்கவதற்காக கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.

இவ்விபத்தில் வாழைச்சேனைப் பிரதேசத்தைச்சேர்ந்த வீ.ரஜீந்திரன் (வயது – 32) அவரது மனைவி தனுஜா ரஜீந்திரன் (வயது – 27) அவர்களது மகள் தருனிஜா (வயது – 06) என்பவர்களே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.A B C E G H

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here