புதிய அரசியலமைப்பினூடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்-என்.ஸ்ரீநேசன் எம்பி

0
250

indexகல்குடா செய்தியாளர்

புதிய அரசியல்யமைப்பினூடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களும் சுயநிர்ணய உரிமையினை நிலை நாட்டி உரிமையினைப் பகிர்ந்து வாழும் நிலையேற்ப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் அர்ப்பணிப்படன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் பன்முப்படுத்தபட்ட நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்கிழ்வில், 8 அமைப்புகளுக்கு 4 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியாக உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார் நிலையிலுள்ளது. எமது கட்சியானது ஊழல் மோசடிகள் இலஞ்சம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவகையில் மக்களுக்கு இயன்ற விடயங்களைச் செய்து கொடுத்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைக் குழப்பிக்கொண்டு யாராவது அரசியலில் தனிக்குடித்தனம் சென்றால் அவர்களுக்குரிய தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் அர்ப்பணிப்படன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அண்மையில் வெளிவந்த இடைக்கால அறிக்கை ஒரு முடிவான அறிக்கையாக வர வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளின் போதும் அரசியல் யாப்பு வரைகின்ற விடயங்களில் கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் எடுத்த முயற்சிகள் போதாதென்ற குற்றச்சாட்டுகளை உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் அரசு கூறி வந்துள்ளது. இடைக்கால அறிக்கையைக் கொண்டு வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் தங்களது விடயங்களை தாங்களே கையாளக் கூடியதாகவும் தமது அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் புதிய அரசியல் யாப்பு இருக்க வேண்டும்.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் பறித்துக்கொள்ளாத வகையில் சமஷ்டித்தன்மை கொண்ட ஒரு அரசியல் யாப்பு உருவாக்க வேண்டுமென்பதில் எமது தலைமைகள் செயற்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இடைக்கால அறிக்கையில் பங்குதாரர்களாகவும் செயற்படுகிறது.

அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையினை வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவற்றைப்பற்றி வியாக்கியானங்களைக் கொடுப்பதை விட, ஆழமாகச்சிந்தித்து அறிந்து கொள்வதன் மூலமாக தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எமது மக்கள் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து சலிப்படைந்து விட்டார்கள். நாங்கள் ஒரு சரியான ஜனநாயக திசையில் கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ளோம். அனுபவமிக்க எமது தலைவர் சம்பந்தன் ஐயா இந்த விடயத்தில் மிகவும் கவனமாக கடந்த காலப்படிப்பினைகளைக் கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

இந்த விடயத்தில் அரசு மீண்டும் எங்களை ஏமாற்றி விட முடியாது. எமது மக்களுக்குப் பொருத்தமில்லாத விடயங்களைத் திணிப்பார்களாகவிருந்தால் அதை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாரில்லை என்றார்.DSC_0010 DSC_0015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here