உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று நீர்ப்பாசனத் திட்டங்கள்

0
196

downloadஉமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மூன்று நீர்ப்பாசனத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைப்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு பதிலளித்தார்.

உமா ஓயா திட்டம் மூலம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 55 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள 1,10,000 குடும்பத்தாரது நீர்ப்பாசனத் தேவைகளையும் நிறைவேற்ற நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்காக 352 மில்லியன் ரூபா செலவில் மூன்று நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இத்திட்டங்களில் இருந்து 1350 நீர்ப்பாசன இணைப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஹாலி எல மிகச்சிறந்த நீர்ப்பாசனத் திட்டமாகும். அதே போன்று ஒவ்வொரு நீர்ப்பாசனத் திட்டத்திற்கும் ஒவ்வொரு இலக்கு உண்டு. அந்த வகையில் தேமோதரவுக்கென பிரிதொரு நீர்ப்பாசனத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Farsan Addalaichenai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here