பட்டதாரி நியமனங்களை விரைந்து வழங்காவிடின், கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
148

14568226_681900855322111_400660160035326466_nஊடகப்பிரிவு
கிழக்கின் பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட் சையில்  40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க ஆளுனர் முன்வர வேண்டுமென கிழக்கின் முன்னாள்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாணத்தில் 3184 வெற்றிடங்கள் உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கான அனுமதியும் உள்ள நிலையில், நியமனங்களை வழங்குவது கடினமா விடயமல்லவென கிழக்கின் முன்னாள் முதல்வர் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் வினவிய போதே கிழக்கின் முன்னாள்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பட்டார்.

தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த முன்னாள்  முதலமைச்சர்,
தற்போது பட்டதாரிகளுக்கான நியமன விடயத்தில் சிலருக்கு அநீதியழைக்கும் வகையிலான  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுவதாக அறியக் கிடைக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் முதலில் 5021  ஆசிரியர்  வெற்றிடங்கள் காணப்பட்ட  நிலையில், வௌி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட எமது ஆசிரியர்களை கடந்த 2016 ஆம் ஆண்டு எமது மாகாணத்திலேயே நியமித்த போது 4884 வெற்றிடங்களை  நாம்  நிரப்ப  வேண்டிய தேவையேற்பட்டது.

இதையடுத்து, பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்துக்கு அளித்த அழுத்தம் மூலமும்  நாம்  மேற்கொண்ட  தொடர் முயற்சியினாலும் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை  நியமிப்பதற்கான அனுமதியை  நாம்  பெற்றுக்  கொண்டோம். இதனடிப்படையில், நாம் முதற்கட்டமாக 259  பட்டதாரிகளுக்கான நியமனங்களை கடந்த ஜூன் மாதம் வழங்கினோம்.

இந்நிலையில், ஏனைய பட்டதாரிகளை நியமிப்பதற்கு இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் 2600 பட்டதாரிகள் 40 புள்ளிகளுக்கு மேல்  பெற்றுள்ளனர். 40 புள்ளிகளைப்பெற்ற சிலருக்கு மாத்திரம் நியமனங்களை வழங்கி ஏனையோரைப் புறக்கணிப்பதற்கான நடவடிக்கைகள்  இடம்பெறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இவர்களுள் 1441 பேருக்கு  நியமனங்களை  வழங்குகின்ற போது, மீதமுள்ள ஆயிரத்து 159 பேருக்கான நியமனங்களையும் ஆளுனர் வழங்க வேண்டும். ஏனெனில், கிழக்கின்  மீதமிருக்கின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியைத் தருவதாக தேசிய முகாமைத்துவத்திணைக்களம் ஏற்கனவே எமக்கு உறுதியளித்தது.

அதனடிப்படையில், ஆளுனருக்கு நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கான பணி மாத்திரமே ஜனாதிபதியுடன் பேசி நிதியினைப் பெற்றுக்கொள்வது  ஆளுனருக்கு கடினமான காரியமல்ல. ஆகவே, இந்த வருட நிறைவுக்குள் குறித்த பட்டதாரிகளுக்கான நியமனங்களை ஆளுனர் வழங்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி, பின்னர் எஞ்சியிருக்கும் 2025  வெற்றிடங்களுக்கும் விரைவில் அனுமதியைப்பெற்று பட்டதாரிகளை உள்ளீர்த்து நியமனங்களை விரைந்து வழங்க வேண்டும். அத்துடன், 35 முதல் 45 வயதுக்கிடைப்பட்ட  பட்டதாரிகள் அனைவரையும் முதற்கட்ட நியமனங்களில் இணைத்துக்’ கொள்ள வேண்டும்.

ஏனெனில், அடுத்து வரும் நியமனங்களின் போதும், 35 வயதுக்குட்பட்டவர்கள் மாத்திரமே  நியமிக்கப்பட போகின்றனர். எனவே, அவர்களுக்கு 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு இது இறுதிச்சந்தரப்பம் என்பதனால், அவர்களைக் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நாம்  குறித்த பட்டதாரிகளைக் கருத்திற்கொண்டே கடும் முயற்சிகளை மேற்கொண்டு பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக மாற்றினோம். அத்துடன், அவர்களை இம்முறை நியமனத்தின் போது, கட்டாயம் உள்வாங்குவதற்கும்  உத்தேசித்திருந்தோம்.

எனவே, ஆளுனர் 35 முதல் 45 வயது வரையான பட்டதாரிகளுக்கான நியமனங்களையும் முதற்கட்ட நியமனங்களின் போது வழங்க வேண்டும். இல்லாவிடின், மீண்டும் கிழக்கில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், அதற்கு ஆளுனரே பொறுப்பேற்க வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here