இனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் றிஷாத் உடைத்தெறிந்தாரா?

0
282

(ஹபீல் எம்.சுஹைர்)

23843298_1547027728716887_2810452576611499419_nஅமைச்சர் றிஷாத் கிந்தோட்டை சம்பவத்தின் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் ஒரு உணர்வுள்ள உண்மையான தலைவனாக இனங்காணப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் களம் விரைந்து அங்கு நடைபெற ஏற்பாடாகி இருந்த மிகப் பெரும் கலவரத்தை தடுத்து நிறுத்திவிட்டார் என்ற வகையில் கிந்தோட்டை மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். வீடியோ ஆதாரமும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மக்களின் பேச்சு அரசியலுக்கு அப்பால் உண்மையானதா என்பதை ஏனைய சில விடயங்களை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கிந்தோட்டைக்கு அமைச்சர் றிஷாத் பதியூர்தீன், அமைச்சர் ஹக்கீம் உட்பட பல முஸ்லிம் அரசியல் வாதிகளும் சென்றிருந்தனர். இருந்த போதிலும் ஞானசார தேரர், அமைச்சர் றிஷாத் அதிகம் துள்ளுவதாகவும் விரைவில் அவருக்கு சாப்பாடு வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இங்கு பல அரசியல் வாதிகள் குறித்த பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றுள்ள போதும் ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதை குறி வைத்து எச்சரித்தது ஏன் என்ற வினாவை எழுகிறது. இங்கு அமைச்சர் றிஷாத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றதற்கும் அமைச்சர் ஹக்கீம் சென்றதற்கும் இடையில் நேரமே வேறுபாடாகும்.

அமைச்சர் றிஷாத் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது களம் விரைந்தார். அமைச்சர் ஹக்கீம் பிரச்சினை நிறைவுற்ற பின் களம் விரைந்தார். அமைச்சர் றிஷாத் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது அங்கு சென்றதால் அவரை முன்னால் வைத்துக் கொண்டு பாதுகாப்பு படையினர் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். அவர்கள் திட்டம் தீட்டிய கால எல்லையினுள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய் இருக்கும். இந்த எரிச்சலின் விமர்சனமே அமைச்சர் றிஷாதுக்கு சாப்பாடு கொடுக்கப் போவதாக ஞானசார தேரர் கூவுவதை நோக்கலாம். அமைச்சர் ஹக்கீம் சென்ற நேரம் அவர்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் வழங்கும் நேரமல்ல.

இவற்றின் மூலம் அமைச்சர் றிஷாதின் கிந்தோட்டை விஜயம் இனவாதிகளின் திட்டங்களை உடைத்தெறிந்துள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது. இன்னும் சிந்தித்து பாருங்கள்! அமைச்சர் றிஷாதுக்கும் ஞானசார தேரருக்குமிடையில் என்ன பிரச்சினை உள்ளது? மக்களுக்காகவா அல்லது அவர்களது தனிப்பட்ட பிரச்சினையா? ஒரு இலங்கை முஸ்லிம் இதனை மாத்திரம் சிந்திப்பானாக இருந்தால் கூட அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவத்தின் அவசியத்தை அறிந்து கொள்வான். அமைச்சர் ஹக்கீமை போன்று ஆற அமர செய்தால் இப்படியான எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. காய்க்கும் மரத்துக்குத் தான் கல்லடி விழும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here