அசாத் சாலியின் தஃவா ஞானசார தேரரிடம் எடுபடாமல் போனது ஏன் ?

0
209

unnamed (3)கடந்த சில மாதங்களாக முஸ்லிம் அணியினர் சிலருக்கும் பொது பல சேனா குழுவினருக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.இன்னும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது கலந்துரையாடல் மூலம் ஞானசார தேரர் தெளிவு பெற்று விட்டதாகவும் அவர் சில விடயங்களில் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுகிறார் அமைதியாகி விட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே அவர் மியன்மார் சென்று ரோஹிங்ய முஸ்லிம்களை கொன்று குவித்த அசின் விராதுவை சந்தித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிந்தோட்டை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் இளைஞர்களை முஸ்லிம்கள் கட்டுப்படுத்த வேண்டும், இரத்த ஆறு ஓடும், அதிகம் துள்ளும் றிஷாத் பதியுர்தீனுக்கு பருப்பு கொடுப்போம் போன்ற தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறார்.அவர் பிரச்சாரம் செய்ய சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.

இங்கு அசாத்சாலி அணியினர் ஞானசார தேரருக்கு வழங்கிய தஃவா பிரச்சாரம் ஞானசார தேரரிடம் எடுபடவில்லை என்ற விடயம் தெளிவாகிறது. அசாத்சாலி அணியினரோ தங்களது பிரச்சாரத்தால் ஏதோ சாதித்துவிட்டோம் என்றெல்லாம் கூவித் திருந்தமையும் சிலர் தங்களைப் பற்றி கூறுவதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாதென பொது பல சேனா அணியினரும் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கிந்தோட்டை விடயத்தில் அசாத்சாலியும் பொது பல சேனாவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.இந்த சம்பவத்துக்கு பிரதான முஸ்லிம்கள் சிங்கள இளைஞனை தாக்கியது என்பதாகும்.அசாத்சாலியே இந்த பிழையை முஸ்லிம்கள் மீது தூக்கிப் போடும் போது அதனை பொதுபல சேனா அணியினர் கூறுவதை பெரிதாக கூற முடியாது.தௌஹீத் ஜமாத்தை எதிர்த்தல் போன்ற சில விடயங்களில் அசாத்சாலி பொது பலசேனாவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அ.அஹமட்
ஊடக செயலாளர்
முஸ்லிம் முற்போக்கு முன்னனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here