ஓரினச்சேர்க்கை சட்டத்தை முஸ்லிம்கள் ஒன்றிந்து எதிர்க்க வேண்டும் ..

Spread the love

unnamed (4)முஸ்லிம் தனியார் சட்ட மாற்றத்தை முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளும் வகையிலான நியாயங்கள் உள்ள போதும் அதனை மாற்ற வேண்டாம் என கூறும் முஸ்லிம்கள், இஸ்லாத்துக்கு பூரண ஓரினச்சேர்க்கை இவ்வரசு கொண்டுவர சிந்திக்கும் போது எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டாதிருப்பது சிறந்ததல்ல.

தற்போதைய அரசாங்கமானது மதம், கலாச்சாரம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற ஒரு அரசல்ல. இது மேற்கத்திய சாயலை அதிகம் பின்பற்றுபவர்களை கொண்ட அரசு. இன்று இலங்கை நாட்டில் ஐ.நா சபையின் அழுத்தத்தின் பெயரில் ஓரினச்சேர்க்கையை சட்டமாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றது. இது நடைபெற்றால் இலங்கை நாட்டின் கலாச்சாரம் கேள்விக்குட்படுத்தப்படும். இது இஸ்லாமிய கலாச்சாரம் உட்பட அனைத்து கலாச்சாரத்தையும் பாதிக்கும்.

முஸ்லிம்கள் முஸ்லிம் தனியார் சட்ட மாற்ற விடயத்தில் கவனமாக இருப்பதை போன்று இவ்விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை. முஸ்லிம் தனியார் சட்ட மாற்றத்தில் இஸ்லாத்தில் குறிப்பிடப்படாத சீதனம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நோக்கினால் அதன் மாற்றம் அவசியமானதெனலாம். ஆனால், ஓரினச்சேர்க்கை போன்ற செயற்பாடுகள் இஸ்லாத்தின் படி பாரதூரமான குற்றமாகும். முஸ்லிம்கள் நம்பும் லூத் நபியினுடைய சமூகம் இக் குற்றத்துக்காகவே அழிக்கப்பட்டது. இப்படி இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கையில் முஸ்லிம்கள் பராமுகமாக இருக்க முடியாது.

இது அனைவரையும் பாதிக்கும் ஒரு விடயம் என்பதால் முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. எது எப்படியோ அது முஸ்லிம்களையும் பாதிக்கும். இந்த விடயங்களை இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டும்.எமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாத்து தூய்மையான இலங்கையை எமது சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அ அஹமட்,
ஊடக செயலாளர்
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*