“அசீசும் தமிழும்” நுால் வெளியீட்டு விழா

(அஷ்ரப் ஏ சமத்)

2கலாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அசீஸ் பற்றிய சிறப்புப் பேச்சும் “அசீசும் தமிழும்” எனும் நுால் வெளியீட்டு விழாவும் இன்று (29) கொழும்பு -07 மகாவலி கேந்திர நிலையத்தில் அசீஸ் மன்றத்தின் தலைவா் காலித் பாருக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா வெஸ்டர்ன மொ்டொச் பல்கலைக்கழக பேராசிரியா் அமீர் அலி (காத்தான்குடி) அவா்கள் நினைவுப் பேச்சினை உரையாற்றினாா்.  இதன்போது புனா்வாழ்வு அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் ஏ.எம் நஹியா எழுதிய அசீசும் தமிழும் எனும் நுால் சிறப்பு பிரதி ஜாமிஆ நளீமியா பணிப்பாளா் காலாநிதி எம்.ஏ.எம் சுக்ரிக்கு வழங்கி வைத்தார். வை.எம்.எம். ஏ தலைவா் எம். நபீல், கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அசீஸ் பற்றி அவரது மாணவனும் கொழும்பு சாஹிரா பழைய மாணவருமான ரத்தின தேரோ உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*