அமெரிக்கா இளைஞனின் விசித்திரமான ஆசையைப் பாருங்களேன்!

Spread the love

online_New_Slideஅமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேற்றுக்கிரகவாசி போல் மாற்றிக் கொள்வதற்காகப் பல நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த வின்னி ஓ எனும் 22 வயது இளைஞர் தன்னை வேற்றுக்கிரகவாசி போல் மாற்றிக்கொள்வதற்காக இதுவரை 110 பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்துள்ளதாகவும் தன்னுடைய பிறப்புறுப்பை விரைவில் அகற்றிவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

இவர் தன்னுடைய 17 வயதில் இருந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக முதன்முறையாக தன்னுடைய உதட்டில் பல்வேறு சாயங்களைப் பூசி தயார்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பகுதி நேர மாடல் ஆன இவர் வேற்றுக்கிரகவாசி போன்று மாறவேண்டும் என்பதற்காக அதிகத் தொகையை செலவிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை நீக்க 130, 000 டாலர்களை செலவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

தன்னுடைய கவனம் முழுவதும் வேற்றுக்கிரகவாசியாக மாறவேண்டும் என்பதே என்றும் பிறப்புறுப்பு இல்லாமல் இருப்பது சாத்தியம் எனவும் ஆனால் அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியதாகவும் வின்னி தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*