தென்கிழக்கு பல்கலைக்கழகம் தேசிய கராத்தேயில் ஏழு பதக்கங்களுடன், கிழக்குமாகாணத்துக்கு 13 பதக்கங்கள்.

Spread the love

images (1)18 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி நேற்று 28.11.2017 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட கிழக்குமாகான வீரர்களில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு தேசிய பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். அதில் இரண்டு தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளிப் பதக்கங்களும், இரண்டு வெண்கலப் பதக்கங்களும் ஆகும்.

காத்தா, குமித்தே, குழு காத்தா என மூன்று வகயாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாட்டின் ஒன்பது மாகாணங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் கிழக்குமாகாணம் மொத்தமாக 13 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. அதில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

முகம்மத் இக்பால்
தலைவர்
கிழக்கு மாகாணம்
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*