சமஷ்டித் தீர்வைத் தராவிடின்தான் தமிழர்கள் தனிநாட்டைக் கோருவர் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் முதலமைச்சர் இடித்துரைப்பு

Spread the love

(பாறுக் ஷிஹான்)

images (2)ஆஸ்ரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோருகின்றனர். அதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற ஜயப்பாடு தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு. ஆனால் சமஷ்டித் தீர்வை வழங்காவிடின்தான் தனிநாட்டை கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும்”
இவ்வாறு ஆஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துரைத்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஆஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்ச்சன் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட போதே முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஆஸ்திரேலியாவில் உள்ளூராட்சி அலகு, மாகாண அலகு மற்றும் சமஷ்டி முறைமையில் அரசாட்சி என அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு மாகாணங்களும் தங்களைத் தாங்கள் ஆளுகின்ற வசதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தான் தமிழ் மக்கள் இங்கு கோருகின்றனர். அதற்கு ஒவ்வொரு அரசும் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளன.
சமஷ்டியை வழங்க மறுப்பதற்கு அவர்களின் அச்சநிலையும் காரணமாக அமைகின்றது. சமஷ்டி அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஆனால் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வழங்காதுவிடின்தான் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்குச் செல்வர். தமிழ் மக்களின் சுயாட்சிக்கு இடையூறு விளைவிக்காதுவிடின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படாது என்று ஆஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துரைத்தேன் – என்றார் முதலமைச்சர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*