மண் அகழ்வினால் பாதிக்கப்படும் ஆலங்குள மற்றும் மியான் குள வீதிகள்.

Spread the love

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மேவான்ட குளம் புணர்நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் அக்குளத்திலிருந்து தற்போது மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இம்மண் அகழ்வானது மேவான்ட குளத்திலிருந்து டிப்பர் வண்டிகளில் ஏற்றப்பட்டு ஆலங்குள மற்றும் மியான்குள வீதிகளினூடாக எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பு பிரதான வீதியினை வந்தடைகின்றது.

இவ்விரு பிரதான வீதிகளையும் நாளாந்தம் விவசாயிகள், மீனவர்கள், பன்ணை தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரால் இரவு  பகலாக பயன்படுத்தும் வீதியாகும். இருந்தபோதும் மழைக்காலங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகம் மியான்குள வீதியில் காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் இவ்ஆலங்குள வீதியினை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இருந்தபோதும் ஆலங்குளம் மற்றும் மியான்குளம் வீதிகள் கிரவல் வீதிகளாக காணப்படுவதனால் இவ்வீதிகளினால் மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் வண்டிகளின் தாக்கத்தினால் மிகவும் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் நடைவழியாக கூட பயன்படுத்த முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும், வீதியினை காரமுனை, மதுரங்கேணி, கிரிமிச்சை, பாலையடிஓடை மற்றும் மாங்கேணி போன்ற பிரதேசங்களில் குடிளிருக்கும் மக்களும் இவ்வீதியினையே அன்றாடம் தங்களது போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2015.10.28ஆந்திகதி ஓட்டமாவடியிலிருந்து தனது குடியிருப்பு கிராமமான காரமுனை கிராமத்திற்கு செல்லும் வழியில் மியான்குள வீதியில் வைத்து மையன் பாவா ஹனீபா (வயது 57) என்பவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, இப்போதுள்ள காலம் மழைக்காலம் என்பதினால் இம்மண் அகழ்வினால் வீதிகள் பழுதடைந்தும். மக்கள் போக்குவரத்திற்கும் இடையூரு விளைவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது ஆகவே, இது விடயத்தில் மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் இவ்விடயத்தில் தலையிட்டு மக்களுக்கான உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*