அம்பாறை மாவட்டத்தில் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை!

Spread the love

(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

அதற்கமைவாக கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம், ஆகிய பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படும் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் இன்று (30) வியாழக்கிழமை கள விஜயம் மேற்கொண்டு குறித்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

பிரதி அமைச்சர் ஹரீசின் 2017ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கடற்கரை விளையாட்டு மைதானம், கல்முனை ஸாஹிரா கல்லூரி மைதானம், கல்முனை பற்றிமா கல்லூரி மைதானம், சாய்ந்தமருது வொலிவோரியன் லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானம், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதானம், மருதமுனை புலவர் மணி சரிபுதீன் வித்தியாலய மைதானம், சம்மாந்துறை மத்திய கல்லூரி மைதனம், சம்மாந்துறை தப்லீக் அரபுக் கல்லூரி மைதானம், மத்திய முகாம் அமீர் அலி பொது விளையாட்டு மைதானம், நாவிதன்வெளி பொது விளையாட்டு மைதானம், ஓலுவில் அல்-ஹம்ரா வித்தியாலய மைதானம், அட்டாளைச்சேனை பொது மைதானம், அக்கரைப்பற்று பொது மைதானம், இறக்காமம் பொது விளையாட்டு மைதானம், பொத்துவில் மத்திய கல்லூரி மைதானம் என்பன அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் யாவும் இவ்வருட நிறைவுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அவ்வாறு பூர்த்தி செய்யப்படாத மைதான அபிவிருத்திகளுக்கு அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடுகளை அடுத்துவரும் ஆண்டில் ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை எற்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விளையாட்டுத்துறை அமைச்சின் விஷேட வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வேலைத்திட்டம் 2018ஆம் ஆண்டில் பூரணப்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*