“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்றவர்கள் கைது!

Spread the love

கல்கமுவ பிரதேசத்தில் ” கல்கமுவே தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுகளையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐந்து சந்தேகபர்களும் நேற்றிரவு அம்பன்பொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த ஐந்துபேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*