முதியவரை அடையாளம் காண உதவக் கோரிக்கை

Spread the love

(பாறுக் ஷிஹான்)

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அடையாளம் காண உதவுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுள்ளது.

“60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமையன்று கைதடி வைத்தியசாலையில் இருந்து காலை 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி இலக்கம் 24 இற்கு சேர்க்கப்பட்டார். இடது காலில் இவருக்குக் காயம் உள்ளது. தற்போது விடுதி இலக்கம் 29இல் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முதியவர் மூலம் எதுவித தகவல்களும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதனால் யாராவது இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி இல. 29 நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*