இந்திய அமைதிப்படையும் வட கிழக்கு முஸ்லீம்களுக்கு ஏற்படுத்திய தாக்கமும். (கல்குடா பிரதேச தாக்குதல் – படங்கள்)

Spread the love

(எச்.எம்.எம்.இத்ரீஸ்)    

வடகிழக்கில் தமிழீல விடுதலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டது. இவ் ஒப்பந்தம் ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்களினாலும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியாலும் எழுதப்பட்டதாகும். ஆனால் தமிழ் ஈழத்தையே பெற வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் அமைதி காக்க வந்த இந்திய இராணுவத்தினருடன் வடகிழக்கில் சண்டையில் ஈடுபட்டார்கள். அப்பொது மஸ்லிம்களின் அனுமதியில்லாமல் இந்த அமைதி ஒப்பந்தம் எழுதப்பட்டதால் வடகிழக்கு முஸலிம் பிரதேசம் வரலாறு காணாத இழப்பை சந்தித்தது. அமைதி ஒப்பந்தம் அமைதி இல்லாமல் போனது.

வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் முஸ்லீம்கள் கொல்லப்பட்டும், இடம்பெயர்தலும் ஏற்பட்டது. தலைவர் பிரபாகரன் தலைமையில் இருந்த புலிகள் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான சண்டையை அரம்பித்தனர். ஏனைய விடுதலைப் போராட்டக் குழக்கள் சமாதானத்துக்கு வந்தனர். இந்த வேலையில்தான் ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்கள் தாக்கப்பட்டன.

கல்குடா பிரதேச தாக்குதல்

வடக்கில் இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்தனர். கிழக்கில் முதன் முறையாக 1987.12.02ம் திகதி பகல் 01.30 மணியளவில் தியாவட்டவான் அரச பாடசாலைக்கு அண்மையில் வைத்து இந்திய இராணுவத்தின் ரோந்து படைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர். இதில் 45ற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இந்திய இராணுவம் மேற்கொண்ட கடுமையான தாக்குதலால் தியாவட்டவான், ஓட்டமாவடி, காவத்தமுனை, வாழைச்செனை போன்ற பிரதேசங்களில் பல உயிர் இழப்பையும், பெறுமதியான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டது. இந்த சேதங்களை இந்திய அமைதிப்படையே செய்தது.

தியாவட்டவான் ஜூம்ஆப்பள்ளிக்கு வந்த குர்ஆன் மத்ரசா மாணவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். தியாவட்டவான் பிரதேச கடைகள் எல்லாம் எறிக்கப்பட்டது. ஓட்டமாவடி பசார் கடைகள் எல்லாம் நெருப்பு வைக்கப்பட்டது. கடுமையான இந்திய அமைதிப்படையின் தாக்குதலால் (செல் தாக்குதல்) எமது பகுதி அல்லோலப்பட்டது. சுமார் 50ற்கும் மேற்பட்ட உயிர்கள் சுட்டும் வெடில் தாக்குதல்களினாலும் கை, கால் இழந்து பரிதாபமாக கொல்லப்படனர்.

நான் அறிந்த வகையில் தியாவட்டவான் வடைகாரன் குடும்பத்தில் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலினை விடுதலைப் புலிகள் வேண்டுமென்றே ஓட்டமாவடி பிரதேசத்தை தாக்க வேண்டும் என திட்டமிட்டு முஸ்லிம் பகுதிக்குள் வைத்து இந்திய இராணுவத்திற்கு தாக்குதல் தொடுக்கப்பட்டதாக அறிய முடிந்தது.

உயிர் இழப்பும் சொத்து நஷ்டமும் 

1. எம். இஸ்மாயில் மனேஜர் (முஅல்லிம்)
2. எம்.சீ.எம். இஸ்மாயில் (ஆசிரியர், வீரகேசரி, தினகரன் ரிப்போர்டர்)
3. தியாவட்டவான் வடைகாரன் குடும்பத்தினர்.
4. பெயர் தெரியாத படுகொலைகள் 45 பேர்

சொத்துக்கள்

தியாவட்டவான் பிரதேச வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டது.
ஓட்டமாவடி பசார் எரிக்கப்பட்டது
வாழைச்சேனைக் கடைகள் உடைக்கப்பட்டன.

1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழ் ஈழர் போராட்டத்தினால் முஸ்லிம் பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரும் ஈழப்போராட்ட குழுவினரும் ஏற்படுத்திய கலவரங்களை பார்க்கலாம்
1. 1985 கிழக்கு தமிழ் முஸ்லிம் கலவரம்
2. 1987 இந்திய இராணுவமும் புலிகளும் ஏற்படுத்திய கலவரம்
3. 1990 முஸ்லிம் வடகிழக்கில் கொல்லப்பட்டும் இடம்பெயர்வும்

தகவல் : மர்சூக்- தியாவட்டவான்

1 Comment

  1. மறக்க முடியாத வரலாற்றுத் தடங்கள்.இப்படியான இன்னும் நிறைய விடயங்களை அடுத்தடுத்த தலை முறைகளுக்காக பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.


*