அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு

(சப்னி அஹமட்)

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (05) பாடசாலையின் அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ. ஹனீபா, அம்பாறை கச்சேரியின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தெளபீக், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், தவணைப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், சிறந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், பாடசாலையின் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்டும் பதவியில் முக்கிய இடத்தில் உள்ள ஆளுமைகளை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்ட முதுசங்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடாசாலைக்கான் தளபாடங்கள், பாடசாலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான் சீருடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*