உரமானிய உதவிப்பணத்தை எதிர்பார்த்திருந்த ஏழை விவசாயிகளுக்கு ஏமாற்றம்…

Spread the love

2016-2017 அண்டு காலப்போகதிற்காக வேண்டி உரமானிய பணத்தைப்பெற்று மழையின்மையால் வேளாண்மை செய்யாத விவசாயிகளுக்கு ஜனாதிபதியினால் மாதாந்தம் 10.000ரூபா வீதம் 4 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் வெறும் 8650.00 ரூபா மாத்திரம் வழங்கப்பட்டது.

இவ்வரட்சிப்பணத்தை பெற்றுக்கொண்ட ஏழை விவசாயிகளுக்கு 2017-2018 ஆண்டு காலபோகத்திற்கான உரமாணிய நிவாரணப்பணம் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை இப்பணத்தை எதிர்பார்த்திருந்த ஏழை விவசாயிகளுக்கு ஏமாற்றமடைந்து விவசாயத்தைகைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே இந்த நல்லாட்சி அரசு ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய பரிசு.

இந்தப்பணம் ஏழை விசாயிகளுக்கு கிடைக்க விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க நடவடிக்கை எடுப்பாரா???

(ஏ எம் றிசாத்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*